
1925 ம் ஆண்டு இந்தியாவின் பரோடவை ஒரு மன்னர் ஆட்சி செய்து வந்தார். இவர் தனது மகனுக்கு போர்ப்பயிற்சி வழங்கி எட்டு குதிரைகள் பூட்டிய தேரில் அழைத்து வந்தார். அந்தக்காலப் பகுதியில் இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் எட்டு குதிரைகள் பூட்டிய தேரில் எவரும் பயணிக்க முடியாது என ஒரு சட்டத்தினை விதித்திருந்தனர். பரோடா மன்னர் இச்சட்டத்தை மீறியே தனது மகனை ஊர்வலமாக அழைத்து வந்திருந்தார். இச்செய்தி ஆங்கிலேயர்களின் காதுகளுக்கு எட்டியது. இதனையடுத்து பரோடா மன்னருக்கு ஆங்கிலேயரினால் ஒரு குற்றப் பத்திரிகை அனுப்பப்பட்டது. அதில் உடனடியாக `வழக்கு விசாரணைகளுக்கு வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

தனது தாத்தா, பாட்டி வாழ்ந்த இந்த நாட்டிலே குதிரை பூட்டிய தேரிலே தாம் பயணிக்க முடியாதா? என்று சட்டத்தரணி ஒருவரூடாக மன்னர் நீதிமன்றம் செல்ல முற்பட்டார். அப்பொழுது அங்கு பிரபல சட்டத்தரணியாக இருந்த மகாத்மா காந்தியை நாடினார். மகாத்மா காந்தி வழக்கை விசாரித்து விட்டு "உண்மையில் உங்கள் மகன் எட்டு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வந்தாரா?" எனக் கேட்டார். 'ஆம்' என பதிலளித்தார் மன்னர். "அப்படியானால் என்னால் பொய் சொல்ல முடியாது. என்னை விட ஒரு கில்லாடி எனது நண்பன் ஒருவன் இருக்கிறான். அவன் தான் முகம்மது அலி ஜின்னா. அவனிடம் போய் முறையிடுங்கள்" என விலகிக் கொண்டார் காந்தி.

மன்னர் முகம்மது அலி ஜின்னாவிடம் சென்றார். வழக்கை விசாரித்த ஜின்னா "இது உண்மையா" எனக் கேட்டார். 'ஆம்' என்றார் மன்னர். "எட்டுக் குதிரைகளில் எத்தனை ஆண்? எத்தனை பெண்?" எனக் கேட்டார் ஜின்னா. '5 ஆண், 3 பெண் குதிரைகள்' என பதிலளித்தார் மன்னர். சரி நீங்கள் போகலாம் நீதிமன்றில் நாம் சிந்திப்போம் என மன்னரை அனுப்பி விட்டார் ஜின்னா.

குறித்த விசாரணை நாளும் வந்தது. நீதிமன்றத்துக்கு வந்தார் ஜின்னா. விசாரணை ஆரம்பமானது. ஆங்கிலேயர் சார்பில் ஆஜரான 1 வது சாட்சியை விசாரித்தார் ஜின்னா. "What is Horse?" எனக் கேட்டார். "குதிரை என்றால் குதிரை" என பதில் வந்தது. அடுத்த கேள்வி "What is Mare?" Mare என்றால் பெண் குதிரை என பதில் வந்தது. 2 வது சாட்சியை விசாரித்தார் ஜின்னா. இதே கேள்விகளையே கேட்டார். இதே பதில்களே வந்தன. இப்பொழுது நீதிபதியைப் பார்த்து கூறிய ஜின்னா "உங்கள் சட்டத்திலே ஓட்டை உள்ளது. அதனை முதலில் அடையுங்கள். எட்டு குதிரை பூட்டிய தேரிலே இந்தியர்கள் எவரும் செல்ல முடியாது என்று தான் சட்டம் உள்ளது. ஆனால் பரோடா மன்னர் 5 Horse களையும், 3 Mare களையும் பயன்படுத்தியே ஊர்வலம் வந்திருக்கிறார்" எனக் கூறினார்.
இந்த வழக்கில் தோல்வியடைந்த ஆங்கிலேயர்கள் பின்னர் சட்டத்தை மாற்றியமைத்தனர்.
" Horse களோ அல்லது Mare களோ பூட்டிய எந்த தேரிலும் இந்தியர்கள் செல்ல முடியாது என்று".
No comments:
Post a Comment