இலங்கையில் மனித உரிமையை பாதுகாப்போம்.
கடந்த கால யுத்த சூழ்நிலைகளின் போது இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக பல்வேறு தரப்பினராலும் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. அவை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. எனினும் இலங்கை அதனை மறுத்து வருகின்றது. எனவே இது பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய அம்சமாகும். இது ஒரு புறமிருக்க...
இலங்கையில் பொது மக்களுடைய உரிமைகள் மீறப்படுகின்ற சம்பவங்களும் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. அவ்வாறான பல நிகழ்வுகளை நாம் ஊடகங்கள் வாயிலாக அறிந்துள்ளோம். ஒரு குழந்தை பிறந்தது முதல் மரணிக்கும் வரையில் தனது வளர்ச்சிப்படிகளில் பல சவால்களை எதிர்கொள்கின்றது. அவ்வாறான சவால்களில் முக்கியமானது கல்வியாகும்.
மாணவர்களின் உரிமை மீறல்கள்.
தனது 6 வயது முதல் 19 வயது வரை பாடசாலைக் கல்வியை மேற்கொள்ளும் ஒரு மாணவன் தனது பள்ளிப்பருவத்திலே பல கஷ்டங்களை எதிர் கொள்கின்றான். தமது மாணவர்களை சிறந்த பிரஜைகளாக்க வேண்டும் என்ற நோக்கோடு தான் எல்லா ஆசிரியர்களும் தமது கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். எனினும் சில ஆசிரியர்களின் நடவடிக்கைகள் இந்த நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு குறித்த மாணவர்களை தண்டிப்பதிலேயே குறியாக உள்ளனர். சில மாணவர்கள் சிறு தவறுகளை செய்தாலும் கூட சில ஆசிரியர்கள் அந்த மாணவர்களை மனதளவிலும் உடலளவிலும் பாதிப்படையச் செய்கிறார்கள். குறிப்பாக 5 ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்கள் இந்தத் துயரங்களை அனுபவிக்கின்றனர். 'மாலை முழுவதும் விளையாடு' என்ற பாரதியின் அறிவுரையை விடுத்து விட்டு தனியார் வகுப்புக்களுக்கு மாலை வேளைகளில் மாணவர்களை அனுப்புவதிலேயே பெற்றோர்கள் குறியாக உள்ளனர். இந்த சந்தர்ப்பங்களில் மாணவர்களின் அக்கறை குறித்து, மாணவர்களின் உரிமைகள் மீறப்படுவது குறித்து, அவர்களின் சுதந்திரம் குறித்து யாரும் சிந்திப்பதில்லை.
இந்த நிலைமைகள் காரணமாக விரக்தியடைகின்ற சில மாணவர்கள் தமது கல்வியினை பாதியிலேயே நிறுத்தி விட்டு தொழிலின் பக்கம் தமது பார்வையை திருப்புகின்றனர். ஆகவே இப்படியான பல்வேறு நிலைமைகளினால் மாணவர்களின் கல்வி உரிமை மீறப்படுவதோடு, அவர்களின் எதிர்காலமும் சூனியமாகி விடுகின்றன.